சுடச்சுட

  

  எகிப்து நாட்டின் பதற்றம் நிறைந்த வடக்கு சினாய் பகுதியில், அந்த நாட்டு ராணுவம் நிகழ்த்திய தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

  இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் முகமது சமீர் வியாழக்கிழமை கூறியதாவது:

  கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை வடக்கு சினாய் பகுதியில் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  பயங்கரவாதிகளுக்குச் சொந்தமான 37 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன என்றார் அவர். கடந்த 2011-ஆம் ஆண்டு ஏற்பட்ட புரட்சி காரணமாக, எகிப்தை 30 ஆண்டுகளாக ஆண்டு வந்த அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலக நேரிட்டது.

  அதிலிருந்து, வடக்கு சினாய் பகுதியில் பயங்கரவாதச் செயல்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. காவல்துறை, பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த சுமார் 500 பேர் இதுவரை பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் பகுதியில் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நிகழ்த்தி பயங்கரவாதிகளை வேட்டையாடி வருகிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai