சுடச்சுட

    

    ஐ.எஸ். முன்னாள் உறுப்பினருக்கு ஸ்விட்சர்லாந்தில் நூதன தண்டனை

    By dn  |   Published on : 12th December 2014 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பில் இணைந்து, பிறகு மனம் மாறி தாயகம் திரும்பிய ஸ்விஸ் இளைஞர் சிறைத் தண்டனையிலிருந்து தப்பினார்.

    சிறைத் தண்டனைக்குப் பதிலாக, 600 மணி நேரம் சமூகப் பணியாற்றுமாறு அவர் பணிக்கப்பட்டார்.

    ஸ்விட்சர்லாந்தின் வாத் பகுதியைச் சேர்ந்த 30 வயது இளைஞர் அண்மையில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார்.

    இணையதளங்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் விடியோ, அவர்களுடனான உரையாடல்களால் கவரப்பட்ட அவர், சிரியா சென்று அந்த அமைப்பில் இணைந்தார்.

    இரண்டு வார காலப் பயிற்சிக்குப் பின், அந்த அமைப்பிலிருந்து வெளியேற அவர் முடிவு செய்ததாகவும், அதன் காரணமாக அவரை ஐ.எஸ். பயங்கரவாதிகள் 54 நாள்கள் சிறையில் அடைத்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், ஸ்விட்ர்லாந்து திரும்பிய அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்த விசாரணை அதிகாரி மைக்கேல் லாபெர், 600 மணி நேர சமூகப் பணியாற்றுமாறு உத்தரவிட்டார்.

    இதுகுறித்து மைக்கேல் லாபெர் கூறியதாவது:

    குற்றப் பின்னணியுள்ள அமைப்பில் இணைந்தது குறித்த குற்றவியல் சட்டப் பிரிவு, வெளிநாட்டு ராணுவத்துக்காக சண்டையிட்டது குறித்த ராணுவச் சட்டப் பிரிவு ஆகியவற்றின் கீழ் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

    அவருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை மிகவும் குறைவானதாகத் தோன்றினாலும், இந்த வழக்கின் தன்மையைக் கொண்டு பார்த்தால் இந்தத் தண்டனையே போதுமானது.

    ஐ.எஸ். அமைப்பிடமிருந்து திரும்பி வரும் எல்லோரும் இதுபோல் சிறைத் தண்டனையிலிருந்து தப்பிவிட முடியும் என்று கூற முடியாது என்றார் அவர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai