சுடச்சுட

  

  சீனாவில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஜின்ஜியாங் மாகாணத்தில், முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

  அந்தப் பகுதியைச் சேர்ந்த உய்குர் இனத்தவருக்கும், சீன ஹன் இனத்தவருக்கும் இடையில் நீண்டகாலமாக பதற்றம் நிலவி வருகிறது. அண்மைக் காலமாக நிகழ்ந்து வரும் இன மோதல்களிலும், பயங்கரவாதத் தாக்குதல்களிலும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

  இந்நிலையில், பயங்கரவாதச் செயல்களைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்தப் பகுதியில் பர்தா அணிந்து வருவதற்குத் தடை விதிப்பது என புதன்கிழமை அதிகாரிகள் முடிவு செய்தனர். இது, மத உரிமையைப் பறிக்கும் செயல் என ஒரு சாரார் குற்றம் சாட்டியுள்ளனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai