சுடச்சுட

  

  இந்தியத் துணைக் கண்டத்தில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதற்காக அல்-காய்தா அமைப்பு அண்மையில் உருவாக்கிய "அல்-காய்தா இந்தியா' உறுப்பினர்கள் 5 பேரை பாகிஸ்தான் போலீஸார் கைது செய்தனர்.

  இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

  கடந்த செப்டம்பர் மாதம் கேமரி கடற்படைத் தளத்தில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய 5 பேர், வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். அந்தத் தளத்தில் மேலும் ஒரு தாக்குதல் நிகழ்த்த பயங்கரவாதிகள் திட்டமிடுவதாக கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில் அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

  கைது செய்யப்பட்டவர்கள் காரி ஷஹீத் உஸ்மான், ஆஸாத் கான், ஃபவாத் கான், ஷஹீத் அன்சாரி, உஸ்மான் என அடையாளம் காணப்பட்டனர்.

  அவர்களிடமிருந்து 10 கிலோ வெடிபொருள்கள், இரண்டு துப்பாக்கிகள், 3 கைத்துப்பாக்கிகள், துப்பாக்கிக் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன என்றார் அந்த அதிகாரி.

  கைது செய்யப்பட்டவர்களில் உஸ்மான் என்பவர் காஷ்மீரில் பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வரும் ஹர்கதுல் ஜிஹாத் அல்-இஸ்லாமி அமைப்பில் உறுப்பினராக இருந்தவர் எனக் கூறப்படுகிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai