சுடச்சுட

  

  பாகிஸ்தானில் அரசுக்கு எதிராக பல மாதங்களாகப் போராடி வரும் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான் கான், போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக பேச்சுவார்த்தை மேற்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார்.

  அந்த நாட்டில் கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டதாக இரு தரப்புகளும் ஒன்றின் மீது ஒன்று குற்றம் சாட்டி வந்தன. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேச்சுவார்த்தையைத் தொடர்வது என இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதாக அந்த நாட்டின் திட்டம், வளர்ச்சித் துறை அமைச்சர் அஷன் இக்பால் கூறினார்.

  தேர்தல் முறைகேடு புகார் காரணமாக, பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பதவி விலக வேண்டுமென்று கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இம்ரான் கான் போராடி வருகிறார். அவரது கட்சியும், மதகுரு தாஹிருல் காத்ரியின் அவாமி தெஹ்ரீக் கட்சியும் நிகழ்த்தி வரும் போராட்டத்தால் நாடாளுமன்றம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகள் முடங்கின.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai