சுடச்சுட

  

  யேமன்: போட்டி ஆயுதக் குழுவினர் 6 பேர் அல்-காய்தாவால் சுட்டுக் கொலை

  By dn  |   Published on : 14th December 2014 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  யேமன் நாட்டில் அல்-காய்தா பயங்கரவாதிகளால் ஹூதி ஆயுதக் குழுவைச் சேர்ந்த ஆறு பேர் கொல்லப்பட்டதாக அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் தெரிவித்தனர்.

  அன்சாருல்லா என்றழைக்கப்படும் ஹூதி ஆயுதக் குழுவினர், யேமன் தலைநகர் சனா உள்பட பல பகுதிகளைக் கடந்த செப்டம்பர் மாதம் 21-ஆம் தேதி கைப்பற்றினர்.

  எனினும், அல்-காய்தா பயங்கரவாதிகள் அவர்களுக்கு எதிராக கடும் எதிர்த் தாக்குதல் நிகழ்த்தி வருகின்றனர்.

  இந்நிலையில், பெய்டா மாகாணத்தில் அடையாளம் தெரியாத சிலர் 6 ஹூதி குழுவினரை சுட்டுக் கொன்றதாக அந்தப் பகுதியைச் சேர்ந்த பழங்குடியினர் தெரிவித்தனர். அரேபிய தீபகற்பத்துக்கான அல்-காய்தா (ஏ.க்யூ.ஏ.பி.) அமைப்பு "டுவிட்டர்' வலைதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், தாங்கள் 70 ஹூதிக்களைக் கொன்றதாகக் கூறியுள்ளது. அல்-காய்தா அமைப்பு தங்களது தாக்குதல்களைக் குறித்து மிகைப்படுத்தியும், ஹூதி ஆயுதக் குழுக்கள் தங்கள் இழப்புகளை மூடி மறைத்தும் அறிக்கைகள் வெளியிடுவது வழக்கமான ஒன்று எனக் கூறப்படுகிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai