சுடச்சுட

  

  பயங்கரவாதத்துக்கு எதிராக பிரிட்டனைச் சேர்ந்த 10 இமாம்கள் இணைந்து இணையதளம் மூலம் செயல்படத் தீர்மானித்துள்ளனர்.

  இது தொடர்பாக ஸண்டே டைம்ஸ் இதழ் வெளியிட்டிருக்கும் செய்தியில் குறிப்பிட்டுள்ள விவரம்: லண்டன், லீஸ்டர், லீட்ஸ், லாங்கஷயர், பக்கிங்காம்ஷயர், மேற்கு மிட்லாண்ட்ஸ், பிரிஸ்டல் உள்ளிட்ட முக்கிய நகரங்களைச் சேர்ந்த இமாம்கள், "இமாம்ஸ் ஆன்லைன்' என்ற வலைதளத்தைத் தொடங்கியுள்ளனர். இதனை, பிரிட்டனிலுள்ள ஷியா, சன்னி ஆகிய இரு பிரிவினரும் வரவேற்றுள்ளனர்.

  இணையதளம் வழியாக வன்முறையைக் காட்டி, அனைவரையும் அச்சுறுத்தும் முயற்சி நடைபெறுகிறது. பொதுமக்களும், இணையதள - சமூக வலைதள நிறுவனங்களும் பயங்கரவாதத்துக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என அந்த வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  சமூக வலைதளங்களில் பயங்கரவாதம் தொடர்பாக எளிதாகக் காணக் கிடைக்கக் கூடிய தகவல்களை அழிக்கத் தவறுவதன் மூலம் முஸ்லிம் சமுதாயத்தின் ஒற்றுமை குலைகிறது என அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், பயங்கரவாதத்துக்குப் பாதுகாப்பான உறைவிடம் அளிக்கும் இணையதள நிறுவனங்களை இமாம்கள் கண்டித்தனர்.

  பிரிட்டனைச் சேர்ந்த பல முஸ்லிம் இளைஞர்கள், இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பில் இணைந்து வருவதாகச் செய்திகள் வரும் நிலையில், அந்நாட்டின் முக்கியப் பகுதிகளைச் சேர்ந்த இமாம்கள், பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து செயல்படத் தீர்மானித்திருப்பது குறிப்பிடத் தக்கது என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai