சுடச்சுட

  

  பாலஸ்தீனத்திலிருந்து வெளியேற ஐ.நா. கெடு விதித்தால் ஏற்கமாட்டோம்: இஸ்ரேல்

  By DN  |   Published on : 16th December 2014 03:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனப் பகுதிகளிலிருந்து இஸ்ரேல் வெளியேறுவதற்கு கெடு விதிக்கும் தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டால், அதை ஏற்கமாட்டோம் என அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

  இதுகுறித்து ராணுவ வானொலியில் அவர் திங்கள்கிழமை கூறியதாவது: உலகம் முழுவதும் இஸ்லாமிய அடிப்படைவாதம் வேகமாகப் பரவி வருகிறது.

  இந்தச் சூழலில் பாலஸ்தீனத்திலிருந்து வெளியேற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கெடு விதித்தால் அதனை ஏற்கமாட்டோம் என்றார் அவர்.

  ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளிலிருந்து இரு ஆண்டுகளுக்குள் இஸ்ரேல் வெளியேற கெடு விதிக்கக் கோரும் தீர்மானத்தை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வரும் புதன்கிழமை கொண்டுவரப் போவதாக பாலஸ்தீனம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

  அதுகுறித்து கேட்டதற்கு நெதன்யாகு இவ்வாறு பதிலளித்தார்.

  அந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டால், அமெரிக்கா தனது தடுப்பு வாக்குரிமையைப் பயன்படுத்தி அதனை நிராகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai