சுடச்சுட

  

  இத்தாலிய கடற்படை வீரர்கள் விவகாரம்: ஐரோப்பிய யூனியன் அதிருப்தி

  By dn  |   Published on : 18th December 2014 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Federica

  இந்திய மீனவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இரு இத்தாலிய கடற்படை வீரர்களின் கோரிக்கைகளை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளதற்கு ஐரோப்பிய யூனியன் அதிருப்தி தெரிவித்துள்ளது.

  இதுகுறித்து அந்த அமைப்பின் வெளி விவகாரங்களுக்கான பிரதிநிதி ஃபெடரிகா மோகேரினி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

  மருத்துவச் சிகிச்சைக்காக இத்தாலியில் தங்கியிருக்க மஸ்ஸிமிலினோ லத்தோரும், கிறிஸ்துமஸ் கொண்டாட அந்த நாடுக்குச் செல்ல அனுமதிக்குமாறு சால்வடோர் கிரோனும் தாக்கல் செய்திருந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது அதிருப்தி அளிக்கிறது.

  ஐரோப்பாவைச் சேர்ந்த இவ்விரு பாதுகாப்புப் படை வீரர்கள் குறித்த வழக்கு, ஏறத்தாழ மூன்று ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

  இந்தியாவும், இத்தாலியும் பேச்சுவார்த்தை நடத்தி, இருநாட்டு நலன்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்தப் பிரச்னைக்குத் உடனடி தீர்வு காண வேண்டும் என்பதை ஐரோப்பிய யூனியன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்று அந்த அறிக்கையில் ஃபெடரிகா குறிப்பிட்டுளளார்.

   

  தூதர் திரும்ப அழைப்பு?

   

  தங்களது கடற்படை வீரர்களின் மனுக்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்தியாவுக்கான தங்கள் நாட்டுத் தூதரை இத்தாலி திரும்ப அழைக்கலாம் எனக் கூறப்படுகிறது.

  இதுகுறித்து இத்தாலிய வெளியுறவுத் துறை அமைச்சர் பாவ்லோ ஜென்டிலேனியை மேற்கோள்காட்டி ஊடகங்கள் கூறுகையில், ""இந்தியாவுக்கான இத்தாலியத் தூதர் டேனியல் மான்சினியை, "அவசர ஆலோசனைக்காக' அழைப்பதாகக் கூறி இத்தாலி அரசு திரும்பப் பெறலாம்'' என்று தெரிவித்துள்ளன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai