சுடச்சுட

  
  net

  நாஜிக்கள் ஆட்சிக் காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் நிகழ்த்தப்பட்ட யூதப் படுகொலையிலிருந்து அந்த நாடுகள் பாடம் கற்கவில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம் சாட்டினார்.

  ஐரோப்பிய யூனியனின் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் இருந்து ஹமாஸ் இயக்கம் நீக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டு அவர் இவ்வாறு தெரிவித்தார்.

  இதுகுறித்து அவர் புதன்கிழமை கூறியதாவது: ஹமாஸ் அமைப்பு எண்ணற்ற போர் குற்றங்களிலும், பயங்கரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது.

  இருந்தும் லக்ஸம்பர்க் நாட்டிலுள்ள ஐரோப்பிய நீதிமன்றம், பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் இருந்து அந்த இயக்கத்தை நீக்கியுள்ளது.

  தங்கள் மண்ணில் 60 லட்சம் யூதர்கள் படுகொலை செய்யப்பட்ட அனுபவத்திலிருந்து ஐரோப்பிய நாடுகள் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது.

  எனினும், நாங்கள் அந்த அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுள்ளோம்.

  அத்தகைய தீய சக்திகளிடமிருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்ற தொடர்ந்து போராடுவோம் என்றார் நெதன்யாகு.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai