சுடச்சுட

    

    ஆஸ்திரேலியாவில் 8 சிறுவர்கள் கத்தியால் குத்திக் கொலை

    By dn  |   Published on : 20th December 2014 12:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆஸ்திரேலியாவின் கேர்ன்ஸ் நகரிலுள்ள குடியிருப்பு ஒன்றில், ஒன்றரை முதல் 15 வரையிலான வயதுடைய 8 சிறுவர்கள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டனர்.

    அந்தக் குடியிருப்பிலிருந்து கத்திக் குத்துக் காயங்களுடன் மீட்கப்பட்ட 34 வயதுப் பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொல்லப்பட்ட சிறுவர்களிடையிலான உறவுமுறை குறித்து தகவல் இல்லை என்று போலீஸார் தெரிவித்தாலும், அந்தச் சிறுவர்கள் அனைவரும் சகோதர சகோதரிகள் எனவும், சிகிச்சை பெற்று வரும் பெண்மணி அவர்களது தாய் எனவும் கூறப்படுகிறது.

    நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் கூறுகையில், ""வார்த்தைகளால் விவரிக்க முடியாத கொடும் குற்றம் நடந்துள்ளது. இந்தச் செய்தியைக் கேள்வியுறும் ஒவ்வொரு பெற்றோராலும் வலியை உணர முடியும்'' என்று கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai