சுடச்சுட

  

  இந்தியாவுக்கான அமெரிக்க புதிய தூதர் இன்று பதவியேற்பு

  By dn  |   Published on : 20th December 2014 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்தியாவுக்கான அமெரிக்க புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிச்சர்ட் வர்மா சனிக்கிழமை (டிச.20) பதவியேற்கிறார்.

  வாஷிங்டனில் நடைபெறும் நிகழ்ச்சியில், ரிச்சர்ட் வர்மாவுக்கு அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

  இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக அந்நாட்டில் வாழும் இந்திய வம்சாவளியினர் நியமிக்கப்படுவது இது முதல்முறை ஆகும். ஜனவரி மாதம் 26ஆம் தேதி நடைபெறவுள்ள இந்திய குடியரசு தின விழாவில், அமெரிக்க அதிபர் ஒபாமா சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இந்நிலையில், இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளியினராகிய வர்மா நியமிக்கப்பட்டிருக்கிறார்.

  இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக இருந்த நான்சி பாவெல், தனது பதவியை ராஜிநாமா செய்தார். அதைத் தொடர்ந்து அந்த பொறுப்பை அமெரிக்க தூதரக அதிகாரி கேத்லின் ஸ்டீபன்ஸ் கவனித்து வருகிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai