சுடச்சுட

  
  df41

  அணு ஆயுதங்களைச் சுமந்து சென்று, கண்டம் விட்டு கண்டம் பாயும் வல்லமை கொண்ட "டி.எப்-41' என்ற ஏவுகணையை சீனா சோதனை செய்துள்ளது.

  இந்த ஏவுகணையை சீன ராணுவம் கடந்த 13ஆம் தேதி சோதனை செய்ததாக "வாஷிங்டன் ஃப்ரீ பீகன்' என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பும், சீனாவின் ஏவுகணை சோதனைகளை இந்த நிறுவனம் உலகுக்கு தெரிவித்தது.

  இந்த ஏவுகணை, ஒரே நேரத்தில் 10 ஆயுதங்களைச் சுமந்து சென்று, 12,000 கிலோ மீட்டர் தொலைவு வரையுள்ள இலக்கை தாக்கும் சக்தி கொண்டதாகும். இலக்கை நெருங்கும் நேரத்தில் ஏவுகணையில் இருந்து அந்த ஆயுதங்கள் தனித்தனியாகப் பிரிந்து செல்லும் தன்மை கொண்டதால், நகரங்களைக் குறிவைத்து பன்முனைத் தாக்குதல் நடத்துவதற்குப் பயன்படுத்த முடியும்.

  பல ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் ஏவுகணையை சீனா சோதிப்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு ஒரே ஒரு ஆயுதத்தை சுமந்து செல்லும் டி.எப்-41 ஏவுகணை சோதிக்கப்பட்டது.

  இதுகுறித்து ஹாங்காங்கில் இருந்து வெளியாகும் "செளத் சீனா மார்னிங் போஸ்ட்' என்ற நாளேடு கூறியிருப்பதாவது: இந்தச் சோதனை மூலம் ஆசிய-பசிபிக் நாடுகளில் அமெரிக்காவின் அணு ஆயுத வலிமைக்கு இணையாக சீனா குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்துள்ளது.

  இந்தப் புதிய சாதனை, நிச்சயம் அமெரிக்காவை கவலையடையச் செய்யும் என்று அந்த நாளேடு தெரிவித்துள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai