சுடச்சுட

    

    போர்க் குற்ற விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க ஐ.நா. வலியுறுத்தல்

    By dn  |   Published on : 24th December 2014 11:35 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இறுதிக் கட்டப் போரின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு இலங்கையை ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூனின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீஃபன் துஜாரிக் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

    போருக்குப் பிந்தைய வாக்குறுதிகளையும், செயல் திட்டங்களையும் நிறைவேற்றுவதில் இலங்கை அரசு முனைப்பு காட்ட வேண்டும் என்பதை ஐ.நா. பொதுச் செயலர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

    மேலும், இறுதிக் கட்டப் போரின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து நடுநிலையான விசாரணை மேற்கொள்வதற்கான ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் அழைப்பை ஏற்று, சர்வதேச விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும் எனவும் ஐ.நா. பொதுச் செயலர் வலியுறுத்தியுள்ளார் என்றார் அவர்.

    தற்போது அதிபர் தேர்தல் பிரசாரம் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இலங்கையில், தற்போதைய அதிபர் ராஜபட்ச, எதிர்க்கட்சிப் பொது வேட்பாளர் மைத்ரிபாலா ஸ்ரீசேனா ஆகிய இருவருமே சர்வதேச போர்க் குற்ற விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டோம் என கூறி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai