சுடச்சுட

    

    பெஷாவர் தாக்குதலுக்குப் பின்பு சிறையிலுள்ள மரண தண்டனை பெற்ற பயங்கரவாதிகள் தூக்கிலிடப்பட்டு வரும் நிலையில், 50 மரண தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள கோட்லக்பத் சிறையைத் தகர்த்து அவர்களை விடுவிப்பதற்கான பயங்கரவாதிகளின் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

    ஃபரீத்கோட் நகரிலுள்ள வீடு ஒன்றில் போலீஸார் நடத்திய சோதனையில் இந்த சதி தொடர்பாக இரண்டு பெண்கள் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ராக்கெட் லாஞ்சர், பாதுகாப்புப் படையினரின் சீருடைகள், காலணிகள், துப்பாக்கிகள், வில்-அம்புகள், செல்போன்கள், "சிம்' அட்டைகள் உள்ளிட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

     

    7 பயங்கரவாதிகள் சாவு

     

    பெஷாவர் தாக்குதலின் எதிரொலியாக ராணுவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கராச்சி புறநகர்ப் பகுதியில் 7 பயங்கரவாதிகளை துணை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.

    இதுகுறித்து துணை ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ""துணை ராணுவத்தினர் வியாழக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஜின்ஜால் பகுதியிலும், வடக்கு புறவழிச் சாலையிலும் அவர்களை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். துணை ராணுவத்தினர் திருப்பித் தாக்கியதில் ஜின்ஜால் பகுதியில் 4 பயங்கரவாதிகளும், வடக்கு புறவழிச் சாலையில் 3 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்'' என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai