சுடச்சுட

    

    பெஷாவர் பள்ளித் தாக்குதலுக்குத் திட்டமிட்டவர் சுட்டுக் கொலை

    By dn  |   Published on : 26th December 2014 11:16 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    attack

    பாகிஸ்தானின் பெஷாவர் ராணுவப் பள்ளியில் நடைபெற்ற கொடூரத் தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டியவர்களில் முக்கியமானவர் எனக் கருதப்படும் தலிபான் உறுப்பினர் சதாமை அந்த நாட்டு பாதுகாப்புப் படையினர் வியாழக்கிழமை சுட்டுக் கொன்றனர்.

    இதுகுறித்து கைபர் மாவட்டத்துக்கான பெஷாவர் பிரிவுத் தலைவர் ஷஹாப் அலி ஷா கூறுகையில், ""கைபர் மாவட்டம், ஜாம்ருத் பகுயில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில், பெஷாவர் தாக்குதலுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட சதாம் கொல்லப்பட்டார். அவரது உதவியாளர்களில் ஒருவர் உயிருடன் பிடிபட்டார்'' என்று தெரிவித்தார்.

    பாகிஸ்தானின் தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்பின் தாரிக் கீடார் குழு உறுப்பினரான சதாம், பெஷாவர் பள்ளியில் தாக்குதல் நிகழ்த்திய 7 பயங்கரவாதிகளுக்கு உதவிகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

    கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், கடந்த ஆண்டு 11 பாதுகாப்புப் படை வீரர்களும், 8 பாதுகாவலர்களும் உயிரிழக்கக் காரணமான பயங்கரவாதத் தாக்குதலுக்கும் சதாம் சதித் திட்டம் தீட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai