சுடச்சுட

    

    அமெரிக்க கூட்டுப் படைத் தாக்குதலில் ஐ.எஸ். நிலைகள் அழிப்பு

    By dn  |   Published on : 28th December 2014 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் சிரியா, இராக்கில் கடந்த சில நாட்களாக நிகழ்த்தி வரும் வான்வழித் தாக்குதல்களில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளின் பல நிலைகள் அழிக்கப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சகமான பென்டகன் தெரிவித்தது.

    இது தொடர்பாக பென்டகன் வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை வெளியிட்டிருக்கும் செய்தி அறிக்கையில் தெரிவித்திருக்கும் விவரம்:

    சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படை, கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் வான்வழித் தாக்குதல்கள் நடத்தி வருகின்றது. இதில் போர் விமானங்களுடன் ஆளில்லா விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

    சிரியா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கோபானியில் கடந்த வியாழக்கிழமை கூட்டுப் படையினர் 13 முறை வான்வழித் தாக்குதல்கள் நடத்தினர். அரபி மொழியில் அயின் அல்-அரப் என அறியப்படும் இந்த நகரில், ஐ.எஸ். பயங்கரவாதிகளின் 17 நிலைகள் அழிக்கப்பட்டன. பயங்கரவாதிகள் பயன்படுத்தி வந்த கட்டடங்கள், வாகனங்கள், ஆயுதங்களும் அழிக்கப்பட்டன.

    அந்த நகரின் மற்றொரு பகுதியில், கூட்டுப் படையினர் வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் பயங்கரவாதிகள் பயன்படுத்திய 3 கட்டடங்களும் இரண்டு வாகனங்களும் தகர்க்கப்பட்டன.

    இராக்கின் நினேவா மற்றும் ஆன்பார் பகுதிகளில் உள்ள ஐ.எஸ். நிலைகள் மீது கூட்டுப் படையினர் கடந்த வியாழன் முதல் தாக்குதல்கள் நிகழ்த்தி வருகின்றனர். இதில், பயங்கரவாதிகள் பயன்படுத்தி வந்த ஏவுகணைகள், பதுங்கு குழிகள், சிறு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை அழிக்கப்பட்டன.

    சிரியா, இராக்கில் கடந்த இரு நாட்களில் 39 வான்வழித் தாக்குதல்களைக் கூட்டுப் படையினர் நிகழ்த்தியுள்ளனர் என்று பென்டகன் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai