சுடச்சுட

    

    உக்ரைன் அரசு - கிளர்ச்சியாளர்கள் இடையே போர்க் கைதிகள் பரிமாற்றம் தொடங்கியது

    By dn  |   Published on : 28th December 2014 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    protest

    உள்நாட்டுச் சண்டை நடைபெற்று வரும் உக்ரைனில், அரசுப் படையினருக்கும், ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் போர்க் கைதிகள் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டது.

    இரு தரப்பினரிடையே "ஸ்கைப்' வலைதளம் மூலம் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

    அதன்படி, 222 கிளர்ச்சியாளர்களை உக்ரைன் அரசும், 145 அரசுப் படை வீரர்களை கிளர்ச்சியாளர்களும் விடுவிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது.

    அதனையடுத்து, கைதிகள் பரிமாற்ற நிகழ்ச்சி, கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள டொனெட்ஸ்க் மாகாணத்தின் வடக்குப் பகுதியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

    வரும் புத்தாண்டை குடும்பத்தினருடன் கொண்டாடும் வகையில், எதிர்பாராத விதமாக தாங்கள் விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சியளிப்பதாக இரு தரப்பு போர்க் கைதிகளும் தெரிவித்தனர்.

    அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையிலும், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமீயா தீபகற்பத்துடனான சாலை, ரயில் போக்குவரத்தை உக்ரைன் அரசு நிறுத்தியுள்ளது.

    பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கிரிமீயா கூறினாலும், இதனால் 23 லட்சம் மக்கள், உக்ரைன் பகுதியிலிருந்து துண்டிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

    இந்த நிலையில், கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai