சுடச்சுட

  

  கைதிகளைத் தூக்கிலிடுவதை நிறுத்துங்கள்: பாகிஸ்தானிடம் ஐ. நா. வலியுறுத்தல்

  By dn  |   Published on : 28th December 2014 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  bank

  பெஷாவர் பள்ளித் தாக்குதலின் எதிரொலியாக, மரண தண்டனை விதிக்கப்பட்ட பயங்கரவாதிகளை தூக்கிலிடுவதை நிறுத்த வேண்டும் எனவும், மரண தண்டனை நிறைவேற்றத் தடையை மீண்டும் கொண்டு வர வேண்டும் எனவும் பாகிஸ்தானை ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன் கேட்டுக் கொண்டுள்ளார்.

  இதுகுறித்து பான் கி-மூனின் செய்தித் தொடர்பாளர் வெள்ளிக்கிழமை கூறியதாவது: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுடன் பொதுச் செயலர் தொலைபேசியில் வியாழக்கிழமை உரையாடினார். "உங்களது இக்கட்டான சூழலை நாங்களும் உணர்கிறோம். எனினும், மரண தண்டனை நிறைவேற்றங்களை உடனடியாக நிறுத்தி, அதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மீண்டும் கொண்டுவர வேண்டும்' என்று அப்போது நவாஸ் ஷெரீஃபிடம் பொதுச் செயலர் கேட்டுக் கொண்டார் என்று பான் கி-மூனின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

  மரண தண்டனை நிறைவேற்றங்களுக்கு பாகிஸ்தான் சுயமாக விதித்திருந்த தடை, பெஷாவர் பள்ளித் தாக்குதலின் எதிரொலியாக விலக்கிக் கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 2012-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக கடந்த வெள்ளிக்கிழமை இரு கைதிகளும், ஞாயிற்றுக்கிழமை நான்கு கைதிகளும் தூக்கிலிடப்பட்டனர்.

  இதுதவிர, மரண தண்டனை பெற்ற 500-க்கும் மேற்பட்டோர் தூக்கிலிடப்படவிருப்பதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை அறிவித்தது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai