Enable Javscript for better performance
ரஷியா : ஃபேஸ்புக் முடக்கத்தையும் மீறி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு- Dinamani

சுடச்சுட

    

    ரஷியா : ஃபேஸ்புக் முடக்கத்தையும் மீறி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு

    By dn  |   Published on : 28th December 2014 12:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ரஷியாவில், அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்த ஃபேஸ்புக் சமூக வலைதளம் முடக்கப்பட்ட நிலையிலும், திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    அதிபர் விளாதீமிர் புதினை எதிர்க்கும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான அலெஸ்ஸி நவால்னி மீது மோசடி வழக்கு ஒன்று நடைபெற்று வருகிறது.

    இந்த வழக்கில் அவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை வழங்க வேண்டுமென்று அரசுத் தரப்பு வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தைக் கோரியுள்ளனர்.

    இந்நிலையில், இந்த வழக்கின்மீது தீர்ப்பு வழங்கப்படவிருக்கும் நாளான வரும் ஜனவரி மாதம் 15-ஆம் தேதியன்று அதிபர் மாளிகைக்கு அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த நவால்னியின் ஆதரவாளர்கள் ஃபேஸ்புக் இணையதளம் மூலம் அழைப்பு விடுத்தனர். அதனைத் தொடர்ந்து ரஷிய அதிகாரிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஃபேஸ்புக் நிறுவனம் அந்தப் பக்கத்தை முடக்கியது. எனினும், "டுவிட்டர்' போன்ற பிற சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி, எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

    திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai