சுடச்சுட

  

  "பிரிட்டிஷ் சிறப்புக் காவல் படை மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ். சதி'

  By dn  |   Published on : 29th December 2014 12:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரசியின் பாதுகாவலர்கள்' என அறியப்படும் பிரிட்டனின் சிறப்புப் பாதுகாப்புப் படையினர் மீது இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டி வருகின்றனர் என அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாக அந்நாட்டில் செய்தி வெளியாகியுள்ளது.

  பிரிட்டிஷ் அரச குடும்பத்தினருக்கும், பிரிட்டனின் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள அவர்களின் அரண்மனைகள், மாளிகைகள் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கும் பாதுகாப்பு அளித்து வருவது, "அரசியின் பாதுகாவலர்கள்' என்கிற சிறப்புப் பாதுகாப்புப் படையாகும்.

  இந்நிலையில், "தி மிரர்' இதழ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ள விவரம்: இணையதளக் கண்காணிப்பில் தெரிய வந்துள்ள விவரங்களின்படி, பாதுகாப்புப் படை வீரரைக் கடத்தி, கொலை செய்யத் திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. இது தொடர்பான தகவல் பரிமாற்றங்கள் தெரிய வந்துள்ளது.

  துப்பாக்கியை ஏந்திய பயங்கரவாதி அல்லது தற்கொலைப் படையினர் அல்லது கத்தியைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்துபவர் எவரேனும் சிறப்புப் பாதுகாப்புப் படை வீரர் மீது தாக்குதல் நடத்தக் கூடும் எனக் கருதப்படுகிறது.

  இது தீவிரமான அச்சுறுத்தல் எனக் கருதப்படுவதால், அதற்கேற்ப, சில எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

  சிறப்புப் பாதுகாப்புப் படையினர் செயல்பாட்டில் உரிய முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

  பெரும்பாலும், ஆப்கானிஸ்தானில் பணியாற்றிய பிரிட்டிஷ் ராணுவ வீரர்களே இந்தப் பாதுகாப்புப் படையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai