சுடச்சுட

    

    ஆப்கானிஸ்தானில் 13 ஆண்டுகளாக போர்ப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா நன்றி தெரிவித்தார்.

    ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ள நேட்டோ படையினரின் போர்ப் பணிகள் முடிவுக்கு வருவதைக் குறிக்கும் நிகழ்ச்சி தலைநகர் காபூலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனையொட்டி அதிபர் ஒபாமா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

    2001-இல் நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பின், அமெரிக்கா 13 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் போரிட்டு வருகிறது.

    அந்த பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட அல்-காய்தா அமைப்பின் தலைமைப் பீடத்தைத் தகர்த்ததன் மூலமும், ஒசாமா பின்லேடனைத் தண்டித்ததன் மூலமும், தாக்குதலில் உயிரிழந்த 3,000 அப்பாவி மக்களுக்கு நீதி கிடைத்துள்ளது.

    இத்தகைய அபாரமான போர்ப் பணியில் ஈடுபட்ட வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் நன்றி என்று அந்த அறிக்கையில் ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai