நைஜீரியாவில் கடத்திய மாணவிகளை தீவிரவாதிகள் விடுவிக்க வேண்டும்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளை தீவிரவாதிகள் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.
நைஜீரியாவில் கடத்திய மாணவிகளை தீவிரவாதிகள் விடுவிக்க வேண்டும்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளை தீவிரவாதிகள் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

நைஜீரிய மாணவிகள் கடத்தப்பட்டுள்ளது குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்த ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு அலுவலகம், "மாணவிகளை அடிமைகளாகவும், பாலியல் அடிமைகளாகவும் விற்பனை செய்ய சர்வதேச சட்டம் தடை விதித்துள்ளது' என்றும் தீவிரவாத அமைப்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அலுவலக செய்தித் தொடர்பாளர் ரூபர்ட் கோல்வில்லி கூறுகையில், "சில நேரங்களில் மனித நேயத்துக்கு எதிராக இது போன்ற குற்றங்கள் இழைக்கப்படுகிறது. இது தொடர்பாக "போகோ ஹராம்' இஸ்லாமிய தீவிரவாத அமைப்பின் தலைவர் வெளியிட்டுள்ள விடியோ பதிவில் குறிப்பிட்டுள்ள மிரட்டல் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்'' என்றார்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை கூறுகையில், ""நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியான (போர்னோ மாகாணம்) சிபோக் நகரில் கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி "போகோ ஹராம்' தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் பள்ளி மாணவிகளை கடத்திச் சென்றிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. அந்த மாணவிகள் உடனடியாக விடுவிக்கப்பட்டு எவ்வித பாதிப்புமின்றி அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்'' என்றார்.

ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூனின் முக்கிய தூதரக அதிகாரி லீலா செரூகி வெளியிட்டுள்ள அறிக்கையில், ""தீவிரவாதிகள் ஏற்கெனவே 200க்கும் மேற்பட்டவர்களை கடத்திச் சென்ற நிலையில் புதன்கிழமையன்றும் மேலும் சில மாணவிகள் கடத்தப்பட்டிருப்பது மிகவும் கவலையளிக்கக் கூடியது. இதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம். கடத்தப்பட்ட மாணவிகள் விற்பனை செய்யப்படுவர் என்று அந்த தீவிரவாத அமைப்பின் தலைவர் கூறியிருப்பதால் மாணவிகளுக்கு கட்டாயத் திருமணம் நடத்தி வைக்க வாய்ப்புள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com