Enable Javscript for better performance
காஸாவில் மீண்டும் பள்ளிகள் திறப்பு- Dinamani

சுடச்சுட

    
    gaza_girls

    இஸ்ரேலுடன் நடைபெற்ற ஐம்பது நாள் போருக்குப் பிறகு காஸா பகுதியில் பள்ளிகள் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டன.

    இது குறித்த தகவலை வெளியிட்ட காஸா பகுதி கல்வித் துறை அதிகாரி ஒருவர், ஒன்றாம் வகுப்பிலிருந்து 12-ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவர்கள் மீண்டும் பள்ளிகளுக்குச் செல்லத் தொடங்கினர் என்றார்.

    மேலும் அவர் கூறியது: இது கல்வி ஆண்டின் முதல் நாளாகும். அரசுப் பள்ளிகளில் கல்வி கற்கும் 2,30,000 மாணவர்கள், ஐ.நா. அமைப்பு நடத்தும் பள்ளிகளில் கல்வி கற்கும் சுமார் 2 லட்சம் பேர் மீண்டும் தங்கள் வகுப்புகளுக்குச் செல்லத் தொடங்கினர். இது தவிர, பல்லாயிரக் கணக்கான மாணவர்கள் கல்வி கற்கும் தனியார் பள்ளிகளும் செயல்படத் தொடங்கியுள்ளன.

    போரின்போது, கல்விக் கூடங்கள் பல சேதமடைந்துவிட்டன. மேலும், ஐ.நா. நடத்திவரும் பல கல்விக்கூடங்கள் அடைக்கல மையங்களாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன. இதனால் பள்ளிகளின் திறப்பு இரண்டு வாரங்கள் தாமதமானது.

    முதல் வாரம் வழக்கமான பாடங்கள் நடைபெறாது. போர் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கும் விதமான பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இதற்காக 11,000 ஆசிரியர்களுக்கும் 3,000 தலைமை ஆசிரியர்களுக்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

    ஹமாஸ் பயங்கரவாதிகள் - இஸ்ரேல் இடையேயான 50 நாள் போரில் 2,100 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலும் பொதுமக்கள் ஆவர். அப்பாவிப் பொதுமக்களை மனிதக் கேடயமாக ஹமாஸ் பயன்படுத்தியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai