Enable Javscript for better performance
கொலையாளிகளை வேட்டையாடுவோம்: கேமரூன்- Dinamani

சுடச்சுட

    
    david-camerron

    தொண்டு நிறுவன ஊழியர் ஹெய்ன்ஸ் தலையைத் துண்டித்துக் கொடூரமான முறையில் கொலை செய்தவர்களை வேட்டையாடுவோம் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் உறுதிபடக் கூறினார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ள விவரம்:

    டேவிட் ஹெய்ன்ஸின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சோதனை மிகுந்த இந்த வேளையில் அவர்கள் தைரியத்தையும் மன உறுதியையும் வெளிப்படுத்தி வந்துள்ளனர்.

    மனிதாபிமானத் தொண்டாற்றி வந்த ஒரு அப்பாவி, கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது தீய சக்திகளின் செயலாகும். எங்களது அனைத்து சக்தியையும் திரட்டி கொலையாளிகளை வேட்டையாடுவோம்.

    எத்தனை காலம் ஆனாலும் அவர்கள் நீதியின் முன்னர் நிறுத்துவோம் என்று கேமரூன் அதில் தெரிவித்தார்.

    ஒபாமா கண்டனம்: டேவிட் ஹெய்ன்ஸ் படுகொலைக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    வாஷிங்டனில் அவர் வெளியிட்ட அறிக்கையில், "ஹெய்ன்ஸ் காட்டுமிராண்டித்தனமாகக் கொலை செய்யப்பட்டதை அமெரிக்கா வன்மையாகக் கண்டிக்கிறது.

    வேதனை மிகுந்த இந்த வேளையில், நெருங்கிய நட்பு நாடான பிரிட்டனுக்கு அமெரிக்கா துணையாக நிற்கும். பிரிட்டனும் பிற நாடுகளும் அமைந்த கூட்டணியைக் கொண்டு இந்தக் கொடூரமான கொலையைச் செய்தவர்களை நீதியின் முன் நிறுத்துவோம்.

    நமது நாடு மட்டுமல்லாமல் உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் தீய சக்தியை அழிப்போம் என்று ஒபாமா தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai