Enable Javscript for better performance
சிரியா விமான தாக்குதலில் 17 பயங்கரவாதிகள் பலி- Dinamani

சுடச்சுட

    

    இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) நிலைகள் மீது சிரியா போர் விமானத் தாக்குதல் நடத்தியதில் 17 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று மனித நேயக் குழுவொன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

    இந்த தாக்குதலில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    யூஃப்ரடீஸ் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள திப்னி எனும் இடத்தில் இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நிலை மீது சிரியாவின் விமானப் படை சனிக்கிழமை கடுமையான தாக்குதல் மேற்கொண்டது.

    இதில் 17 பேர் கொல்லப்பட்டனர். பயங்கரவாதப் பயிற்சி பெற்று வந்த தனது சகோதரரைக் காணச் சென்ற ஒரு சிறுவனும் இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளான் என்று அந்த மனித நேய அமைப்பு தெரிவித்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai