Enable Javscript for better performance
நைஜீரிய கட்டட விபத்து: 40 பேர் பலி- Dinamani

சுடச்சுட

    

    நைஜீரியாவின் லாகோஸ் நகரில் தேவாலயத்துக்கு சொந்தமான கட்டடம் சரிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை நாற்பதாக அதிகரித்துள்ளது.

    லாகோஸில் டி.பி. ஜோஷுவா எனும் பிரபல மத போதகர் நிறுவிய தேவாலய வளாகத்தில் இந்த விபத்து ஏற்பட்டது.

    விருந்தினர்கள் தங்குவதற்காக வளாகத்தில் அமைக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டடத்தில் கூடுதலாக மாடிகள் கட்டும் பணி நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு திடீரென்று இந்தக் கட்டடம் சரிந்தது.

    இடிபாடுகளில் சிக்கி 40 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 124 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai