Enable Javscript for better performance
அணு உலை அமைக்க சீனா அனுமதி- Dinamani

சுடச்சுட

    

    சீனாவிலேயே உருவாக்கப்பட்ட, மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த "ஹுவாலாங் ஒன்' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அணு உலை அமைப்பதற்கு அந்த நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    இதன்மூலம், அந்த நாட்டின் மாசற்ற எரிபொருள் தேவை கணிசமாக நிறைவு செய்யப்படுவதுடன், அணுசக்தித் துறையும் ஊக்கம் பெறும் எனக் கூறப்படுகிறது.

    சீனா அணுசக்தி நிறுவனமும், சீன தேசிய அணுக் கழகமும் இணைந்து அதி நவீன "ஹுவலாங் ஒன்' அணு உலைத் தொழில்நுட்பத்தை உள்நாட்டிலேயே கடந்த ஆண்டுத் தொடக்கத்தில் உருவாக்கியது.

    இந்தத் தொழில்நுட்பத்துக்கு அந்த நாட்டின் தேசிய அணுசக்தி நிர்வாகம் கடந்த நவம்பர் மாதம் அங்கீகாரம் வழங்கியது.

    இந்த நிலையில், அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அணு உலை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைக் கொண்டு அணு உலை அமைக்கப்படவிருப்பதால், சீனாவின் அணுசக்தி துறை சார்ந்த பிற நிறுவனங்களும் வளர்ச்சியடையும் எனக் கூறப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai