Enable Javscript for better performance
இந்தோனேசிய போர் விமானத்தில் தீ: விமானி உயிர் தப்பினார்- Dinamani

சுடச்சுட

    

    இந்தோனேசிய போர் விமானத்தில் தீ: விமானி உயிர் தப்பினார்

    By dn  |   Published on : 17th April 2015 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    fire

    இந்தோனேசியாவில், ஓடுதளத்திலிருந்து வியாழக்கிழமை புறப்பட்ட போர் விமானத்தில் திடீரென தீப்பிடித்தது.

    அதிலிருந்த விமானி உடனடியாக கீழே குதித்து உயிர் தப்பினார். எனினும், உயரத்திலிருந்து குதித்ததால் அவர் காயமடைந்தார்.

    தலைநகர் ஜகார்தாவிலுள்ள விமானதளத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இதுகுறித்து இந்தோனேசிய விமானப் படைத் தளபதி ஆகஸ் சுப்ரியத்னா கூறியதாவது:

    எஃப்-16 வகையைச் சேர்ந்த போர் விமானம், ஓடுபாதையிலிருந்து பறப்பதற்கு முன்னதாக அதன் என்ஜினில் தீப்பிடித்தது.

    உடனடியாக விமானத்தை நிறுத்திய அதன் விமானி, விமானத்திலிருந்து குதித்தார்.

    தற்போது அவர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும் அவர் சுயநினைவுடன் உள்ளார் என்றார் சுப்ரியத்னா.

    இந்த தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தோனேசியாவில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஆசிய, ஆப்பிரிக்கத் தலைவர்களின் மாநாட்டுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கான பயிற்சியில் அந்த விமானம் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai