Enable Javscript for better performance
பாகிஸ்தானில் மேலும் ஐவருக்குத் தூக்கு- Dinamani

சுடச்சுட

    

    பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மேலும் 5 பேர் அந்த நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் வியாழக்கிழமை தூக்கிலிடப்பட்டனர்.

    இத்துடன், மரண தண்டனை நிறைவேற்றங்களுக்கு பாகிஸ்தான் அரசு விதித்துக் கொண்டிருந்த தடை விலக்கப்பட்ட பிறகு அந்த நாட்டில் தூக்கிலிடப்படும் கைதிகளின் எண்ணிக்கை 71 ஆகியுள்ளது.

    6 பேரைக் கொன்ற வழக்கில் ஒருவரும், உடன் பணியாற்றியவரை கொலை செய்த வழக்கில் ஒருவரும் அடியாலா சிறையில் தூக்கிலிடப்பட்டனர்.

    குஜ்ரன்வாலா சிறையில் இருவருக்கும், கொள்ளை முயற்சியின் போது பெண்ணைக் கொலை செய்ததாக ஃபைஸலாபாத் சிறையில் ஒருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    பெஷாவர் ராணுவப் பள்ளியில் தலிபான் பயங்கரவாதிகள் கடந்த டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி நிகழ்த்திய கொடூரத் தாக்குதலில் 134 மாணவர்கள் உள்பட 150-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அதனைத் தொடர்ந்து, பயங்கரவாதத்துக்கு எதிரான நிலையைக் கடுமையாக்கும் விதமாக பாகிஸ்தான் அரசு மரண தண்டனை நிறைவேற்றங்களுக்கான தடையை நீக்கியது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai