Enable Javscript for better performance
மைக்ரோசாஃப்ட் தலைவர் சத்யாவுக்கு ஒபாமா சிறப்பு விருது- Dinamani

சுடச்சுட

    

    மைக்ரோசாஃப்ட் தலைவர் சத்யாவுக்கு ஒபாமா சிறப்பு விருது

    By dn  |   Published on : 17th April 2015 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    satya

    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ள இந்தியரான சத்யா நாதெள்ளா (47) அமெரிக்க அதிபரின் சிறப்பு விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    அமெரிக்க நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களின் குடும்பத்தினரின் நலனை முன்னிட்டு சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம், அந்த நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல், சமூகத்திலும், பொருளாதாரத்திலும் நல்ல மாற்றங்களைக் கொண்டு வருபவர்களுக்கு அமெரிக்க அதிபரின் "மாற்றத்துக்கான சாம்பியன்' சிறப்பு விருது அளிக்கப்படுகிறது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் தொடர்புடைய அனைத்துப் பொருள் வழங்கும் நிறுவனங்களின் ஊழியர்களும் பயன்பெறும் வகையில், ஆண்டுக்கு 15 நாட்கள் ஊதியத்தோடு கூடிய விடுப்புத் திட்டத்தை சத்யா நாதெள்ளா அண்மையில் அறிவித்தார்.

    இதனைப் பாராட்டி அமெரிக்க அதிபரின் சிறப்பு விருது வழங்க சத்யா நாதெள்ளா தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

    ஹைதராபாதில் பிறந்த சத்யா நாதெள்ளா, அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்கச் சென்றார். 1992-இல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் சேர்ந்த அவர், அந்த நிறுவனத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். கடந்த ஆண்டு அதன் தலைமைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai