Enable Javscript for better performance
காலீதா ஜியா மீது மேலும் ஒரு தீவைப்பு சதி வழக்கு: வங்கதேசம்- Dinamani

சுடச்சுட

    

    காலீதா ஜியா மீது மேலும் ஒரு தீவைப்பு சதி வழக்கு: வங்கதேசம்

    By dn  |   Published on : 27th January 2015 11:55 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    zia

    சரக்கு வாகனத் தீவைப்புக்கு சதித் திட்டம் தீட்டியதாக வங்கதேச முன்னாள் பிரதமர் காலீதா ஜியா மீது மேலும் ஒரு வழக்கை காவல் துறை பதிவு செய்துள்ளது.

    செளதாகிராம் என்னும் இடத்தில் சரக்கு வாகனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை தீவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக காலீதா ஜியா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை காலை முதல் 36 மணி நேர மறியலுக்கு அவரது கட்சியின் தலைமையில் 20 எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன. மறியலின்போது, சரக்க வாகனத்துக்குத் தீவைக்கப்பட்டது.

    பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், ஆளும் கட்சியினரின் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு எதிராக, வங்கதேச தேசியக் கட்சியினர் கண்டனக் கூட்டங்கள் நடத்தத் திட்டமிட்டனர்.

    இந்நிலையில், வங்கதேச தேசியக் கட்சி அலுவலகத்தை காவல் துறையினர் முற்றுகையிட்டனர். கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான காலீதா ஜியா இதனால் பல நாள்கள் அலுவலகத்திலேயே முடக்கிவைக்கப்பட்டார்.

    இதையடுத்து, நாடு தழுவிய மறியல் போராட்டத்தை அக்கட்சி அறிவித்தது. மறியலில் பரவலாக வன்முறை வெடித்தது. ஆங்காங்கே தொடர்ந்து நிகழ்ந்து வரும் வன்முறைச் சம்பவங்களில் இதுவரை, 37 பேர் உயிரிழந்தனர்.

    தலைநகரில் பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் 29 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக சதித் திட்டம் தீட்டியதாக காலீதா ஜியா மீது ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சனிக்கிழமை பதிவு செய்யப்பட்ட அந்த வழக்கில் ஜமாத்-இ-இஸ்லாமி, வங்கதேச தேசியக் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த மேலும் 68 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    வன்முறையில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு காலீதா ஜியா மீது நடவடிக்கை எடுப்பதே சரியான முடிவாக இருக்கும் என பிரதமர் ஷேக் ஹசீனா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசினார் என்பது குறிப்பிடத் தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai