Enable Javscript for better performance
கிழக்கு உக்ரைன் சண்டையில் 9 வீரர்கள் பலி- Dinamani

சுடச்சுட

    

    கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களுடன் நிகழ்ந்த சண்டையில் 9 வீரர்கள் உயிரிழந்தனர் என்று அந்நாட்டு ராணுவம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

    கிழக்கு உக்ரைனில் ராணுவத்தினருக்கும் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த பல மாதங்களாக சண்டை நடைபெற்று வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் நிகழ்ந்த சண்டையில் 9 வீரர்கள் இறந்ததாக ராணுவ செய்தித் தொடர்பாளர் விளாதிஸ்லாவ் செலஸ்நியோவ் கூறினார்.

    மேலும் 29 வீரர்கள் காயமடைந்தனர் என்று அவர் தெரிவித்தார்.

    சென்ற ஆண்டு, செப்டம்பர் மாதம் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட அமைதி ஒப்பந்தம் பொய்த்துவிட்டது எனக் கூறும் அளவுக்கு கடந்த சில நாள்களாக கடும் சண்டை நடைபெற்று வருகிறது.

    டொனெட்ஸ்க் விமான நிலையம் கடந்த வாரம் கிளர்ச்சியாளர்களின் முழுக்கட்டுப்பாட்டில் வந்த பின்னர், முக்கியத்துவம் வாய்ந்த மரியுபோல் துறைமுகத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இரு தரப்பும் தீவிரம் காட்டி வருகின்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai