Enable Javscript for better performance
வெள்ளை மாளிகையில் விழுந்த ஆளில்லா விமானம்!- Dinamani

சுடச்சுட

    

    அமெரிக்க அதிபரின் இல்லமான வெள்ளை மாளிகை வளாகத்தில் சிறிய ரக ஆளில்லா விமானமொன்று ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

    இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் கூறுகையில், வெள்ளை மாளிகை வளாகத்தில் சிறிய ரக ஆளில்லா விமானம் பாதுகாப்புப்

    படையினரால் கண்டெடுக்கப்பட்டது. இந்த சிறு விமானத்தால் எந்த ஆபத்தும் இல்லையெனத் தெரிய வருகிறது. அதிபரின் காவல் படையினர் இது தொடர்பாக விசாரணை

    நடத்தி வருகின்றனர் என்றார்.

    அந்த விமானத்தின் அளவு முதலான பிற தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. பயங்கரவாதிகளுக்கு எதிராக ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டு

    வருகின்றன என்றபோதிலும், இப்போது பல விதமான சிறு ரக ஆளில்லா விமானங்கள் விற்பனையில் உள்ளன. குழந்தைகளின் பரிசுப் பொருளாகவும் இவை விற்பனைக்கு

    வந்துள்ளன. அண்மையில், வெள்ளை மாளிகைக்குள் ஆயுதத்துடன் மர்ம நபர் நுழைந்த சம்பவத்தையடுத்து, இப்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai