Enable Javscript for better performance
சிங்கப்பூர் அதிபர் விரைவில் இந்தியா வருகை- Dinamani

சுடச்சுட

    

    சிங்கப்பூர் அதிபர் டான் கெங் யாம் விரைவில் இந்தியாவுக்கு வருகை தர உள்ளதாக, அந்நாட்டின் போக்குவரத்துத் துறை அமைச்சர் லூய் டக் யூ தெரிவித்தார்.

    சிங்கப்பூரில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்திய குடியரசு தின நிகழ்ச்சியில் கெளரவ விருந்தினராக கலந்து கொண்டு லூய் டக் யூ பேசியதாவது:

    சிங்கப்பூர் அதிபர் டான் கெங் யாம், இரண்டு வாரங்களில் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். அப்போது, அவர் இந்தியத் தலைவர்களை சந்திக்க உள்ளார். இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அவருடைய பயணம் அமையும்.

    சிங்கப்பூரின் வரலாற்றுப் பக்கங்களில் இந்தியாவுக்கு தனி இடம் உண்டு. 50 ஆண்டுகளுக்கு முன்பு, 1965-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூர் விடுதலை பெற்ற போது, எங்கள் நாட்டுடன் உறவை முதலில் வளர்த்துக் கொண்ட வெகு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

    அணிசேரா நாடுகள் அமைப்பில் சிங்கப்பூர் இணைவதற்கு இந்தியா முக்கிய பங்காற்றியுள்ளது.

    சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ கான் யூ 1966-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிகாரப்பூர்வமாக பயணம் மேற்கொண்ட முதல் நாடு இந்தியா ஆகும்.

    கடந்த அரை நூற்றாண்டுகளாக, இரு நாடுகளுக்கும் இடையே சிறப்பான உறவு நிலவுகிறது. முக்கியமாக, உயர்மட்ட அளவிலான உறவு வலுப்பட்டு வருகிறது.

    இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் புதிய தலைநகரை உருவாக்கும் பணியில் சிங்கப்பூர் முக்கிய பங்களிப்பை ஆற்றும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai