Enable Javscript for better performance
பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: 53 பயங்கரவாதிகள் பலி- Dinamani

சுடச்சுட

    

    பாகிஸ்தான் ராணுவம் செவ்வாய்க்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் தலிபான் பயங்கரவாதிகள் 53 பேர் கொல்லப்பட்டனர்.

    இதுகுறித்து அந்நாட்டு ராணுவத் தளபதி ஆசிம் சலீம் பஜ்வா கூறியதாவது:

    தலிபான்கள் ஆதிக்கம் நிறைந்த தட்டாகெல் மலைப் பகுதிகளில் பாகிஸ்தான் விமானங்கள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டன.

    ஆப்கானிஸ்தான் எல்லை அருகே நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் அங்கு பதுங்கியிருந்த தலிபான் வெளிநாட்டு பயங்கரவாதிகள் உள்பட 53 பேர் கொல்லப்பட்டனர்.

    இதில் பயங்கரவாதிகளின் 6 பதுங்குக்குழிகள், 7 ஆயுதம் தாங்கிய வாகனங்கள் ஆகியவையும் அழிக்கப்பட்டன.

    கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, தலிபான்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai