ஆப்பிரிக்க யூனியன் தலைவராக ராபர்ட் முகாபே பதவியேற்பு

ஆப்பிரிக்க யூனியனின் புதிய தலைவராக ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார்.
ஆப்பிரிக்க யூனியன் தலைவராக ராபர்ட் முகாபே பதவியேற்பு

ஆப்பிரிக்க யூனியனின் புதிய தலைவராக ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார்.

எத்தியோப்பியத் தலைநகர் ஆடிஸ் ஆபபாவில் நடைபெறும் ஆப்பிரிக்க யூனியன் மாநாட்டில், முன்னாள் தலைவர் ஏபல் அஜீஸிடமிருந்து இந்தப் பொறுப்பை அவர் பெற்றுள்ளார்.

இதுகுறித்து முகாபா கூறுகையில், ""கடுமையான பொறுப்புகளைக் கொண்ட இந்தப் பதவிக்கு, கடந்த ஆகஸ்ட் மாதம் என்னைத் தேர்ந்தெடுத்த உறுப்பிணர்களின் முடிவை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன்'' என்றார்.90 வயதாகும் அதிபர் ராபர்ட் முகாபே, ஜிம்பாப்வேயின் மிக மூத்த அதிபர் ஆவார்.

ஜிம்பாப்வே விடுதலைக்காக ஆயுதம் தாங்கிப் போராடினார்.

விடுதலை கிடைத்த 1980-ஆம் ஆண்டிலிருந்து அந்த நாட்டின் அதிபராகப் பதவி வகித்து வருகிறார்.

எனினும், முப்பது ஆண்டுகளாக அனைத்து தேர்தல்களிலும் அவரது கட்சி வெற்றி பெறும் வகையில், எதிர்க் கட்சிகள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து வருவதாக அவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com