3,000 நைஜீரிய அகதிகள் நைஜரிலிருந்து வெளியேற்றம்

நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு அஞ்சி அண்டை நாடான நைஜரில் தஞ்சமடைந்த

நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு அஞ்சி அண்டை நாடான நைஜரில் தஞ்சமடைந்த 3,000 அகதிகள், மீண்டும் தாயகம் திருப்பி அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 அகதிகள் முகாம்களிலிருந்து கடுமையான சூழலில் வெளியேற்றப்பட்ட அவர்களில், 12 பேர் நைஜீரியா திரும்பும் வழியில் உயிரிழந்ததாக அதிகாரிகளும், சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் புதன்கிழமை தெரிவித்தனர்.
 இதுகுறித்து அகதிகள் தரப்பில் கூறப்பட்டதாவது:
 நைஜரின் சாட் ஏரி பகுதியிலுள்ள ஒரு தீவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் கடந்த வாரம் தாக்குதல் நிகழ்த்தினர்.
 அதையடுத்து, நைஜரிலிருந்து வெளியேறுமாறு எங்களுக்கு ராணுவத்தினர் உத்தரவிட்டனர்.
 எங்கள் துணிமணிகளை எடுத்துக்கொள்ளக்கூட அவர்கள் நேரம் தரவில்லை. அதனால் அனைத்து உடமைகளையும் அப்படியே விட்டுவிட்டு வெளியேறும் கட்டாயத்துக்கு உள்ளானோம்.
 அனைத்து அகதிகளும் 3 நாள்கள் நடந்து நைஜீரிய எல்லையை அடைய வேண்டியிருந்தது.
 குடிநீர் இல்லாமலும், கடுமையான வெப்பத்திலும் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பயணத்தின்போது, ஒரு பெண், புதிதாகப் பிறந்த அவரது இரட்டைக் குழந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர்.
 தற்போது வந்தடைந்துள்ள 3,000 அகதிகள் மட்டுமின்றி, மேலும் பலர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர் என்றனர் அகதிகள். இது குறித்து நைஜர் ராணுவம் கருத்து கூற மறுத்துவிட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com