சுடச்சுட

  

  அல்-காய்தா பயங்கரவாதிகளுக்கு உதவி: இந்திய சகோதரர்கள் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

  By  வாஷிங்டன்,  |   Published on : 07th November 2015 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அல்-காய்தா பயங்கரவாதிகளுக்கு உதவியதாக இந்திய சகோதரர்கள் இருவர் உள்பட 4 பேர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
   குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களில் யாஹ்யா ஃபாரூக் முகமது (37), இப்ராஹிம் சுபைர் முகமது (36) ஆகிய இருவரும் இந்தியர்கள். ஆசிப் அகமது சலீம் (35), அவரது அண்ணன் சுல்தான் ரூம் சலீம் (40) ஆகியோர் குற்றம்சாட்டப்பட்ட மேலும் இருவர்.
   இவர்கள் அல்-காய்தா தீவிரவாதத் தலைவர் அன்வர் அல்-அவ்லாகிக்கு பல்வேறு வகைகளில் உதவி செய்து வந்துள்ளனர். முக்கியமாக பயங்கரவாத நடவடிக்கைகளுக்குத் தேவையான பணத்தையும், ஆயுதங்களையும் கொடுத்துள்ளனர் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆயுதப் போராட்டத்துக்கு உதவுமாறு, அவ்லாகி விடுத்த அழைப்பை ஏற்று இந்த நால்வரும் அல்-காய்தா பயங்கரவாதிகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டனர் என்று கூறப்படுகிறது.
   இது தவிர இந்திய சகோதரர்கள் மீது வங்கியில் பல ஆயிரம் டாலர் பணத்தை மோசடி செய்ததாகவும் குற்றச்சாட்டும் உள்ளது.
   இவர்களில் ஃபாரூக், ஓஹியோ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர். அமெரிக்கப் பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
   அவரது தம்பி இப்ராஹிம், இல்லினாய்ஸ் பல்கலைக்கழக்கத்தில் பொறியியல் பட்டம் பெற்றார். அவரும் அமெரிக்கப் பெண்ணை திருமணம் செய்து கொண்டு, பிறகு நிரந்தர அமெரிக்கக் குடியுரிமை பெற்றுள்ளார்.
   அவ்லாகிக்கு 2005-ஆம் ஆண்டு முதல் 2012-ஆம் ஆண்டு வரை பணமும், ஆயுதங்களும் கொடுத்து உதவியுள்ளனர். இதற்காக அவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அடிக்கடி பயணம் செய்துள்ளனர். அவர்களது வங்கிக் கணக்குகளில் பெருமளவில் பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது.
   ஃபாரூக், 2009-ம் ஆண்டு ஏமன் சென்று அவ்லாகியைச் சந்தித்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா 2011-ஆம் ஆண்டு நடத்திய வான் தாக்குதலில், அவ்லாகி கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai