Enable Javscript for better performance
ஐ.எஸ்.ஸுக்கு எதிரான போரில் அமெரிக்காவின் கை ஓங்கியுள்ளது- Dinamani

சுடச்சுட

    

    ஐ.எஸ்.ஸுக்கு எதிரான போரில் அமெரிக்காவின் கை ஓங்கியுள்ளது

    By  வாஷிங்டன்,  |   Published on : 15th April 2016 01:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    24

    இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்கக் கூட்டுப் படையின் கை ஓங்கியிருப்பதாக அதிபர் ஒபாமா கூறினார்.
     அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. தலைமை அலுவலகத்தில் உயரதிகாரிகளுடன் ஒபாமா புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.
     அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிரியாவிலும், இராக்கிலும் தொடர்ந்து வெற்றிவாகை சூடி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள், தற்போது தங்கள் இருப்பைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
     அவர்களுக்கு எதிராகத் தாக்குதல் நிகழ்த்தி வரும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையின் கை ஓங்கியுள்ளது. தற்போது ஐ.எஸ்.ஸுக்கு எதிரான போரில் நல்ல உத்வேகம் உள்ளது.
     அந்த உத்வேகத்தை இறுதி வரை தளர விட மாட்டோம். சரிவிலிருந்து மீளும் முயற்சியாக, பெல்ஜியம், துருக்கி, இராக் போன்ற நாடுகளில் அப்பாவி மக்கள் மீது ஈவிரக்கமற்ற தாக்குதல்களை ஐ.எஸ். பயங்கரவாதிகள் மேற்கொண்டனர்.
     இராக்கில் கால்பந்து விளையாட்டை ரசித்துக் கொண்டிருந்த சிறுவர்களைக் கூட அவர்களது பயங்கரவாதம் விட்டு வைக்கவில்லை. இதுபோன்ற வெறித்தனமான தாக்குதல்கள் மூலம் கூட்டுப் படைகளின் மன உறுதியைக் குலைத்துவிடலாம் என்று ஐ.எஸ். பயங்கரவாதிகள் தப்புக் கணக்கு போடுகிறார்கள். ஆனால் உண்மையில், அவர்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டை அந்தத் தாக்குதல்கள் மேலும் அதிகரிக்கவே செய்கின்றன.
     அமெரிக்கக் கூட்டுப் படைகளின் விமானங்கள் ஐ.எஸ். பயங்கரவாத இலக்குகளை தொடர்ந்து குண்டு வீசி அழித்து வருகின்றன. பயங்கரவாதிகளால் வெளியில் தலைகாட்டவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர்களது முக்கியத் தலைவர்களைக் கொல்வதிலும், எண்ணெய் விற்பனை உள்ளிட்ட வருவாய் ஆதராங்களை அழிப்பதிலும் அமெரிக்கா வெற்றி கண்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் ஆட்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது என்றார் ஒபாமா.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai