Enable Javscript for better performance
செம கெட்டப்பில் கலக்கும் இங்கிலாந்து ராணுவ நாய்கள்- Dinamani

சுடச்சுட

    
    england_dog

    ராணுவத்துக்கும், காவல்துறைக்கும் மிகச் சவாலான தருணங்களில் எல்லாம் உற்ற நண்பனாக ஓடி வந்து உதவி செய்யும் துப்பறியும் நாய்களுக்கு இங்கிலாந்து ராணுவம் தக்க மரியாதை செய்துள்ளது.

    இங்கிலாந்து ராணுவ வீரர்கள், ஜோர்டான் நாட்டு ராணுவத்தினருடன் கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    இங்கிலாந்து ராணுவ வீரர்களுடன் மோப்ப நாய்களும் உடன் சென்றுள்ளன. ஜோர்டான் நாட்டு வெயிலை தாக்குப்பிடிக்கும் வகையில், இங்கிலாந்து ராணுவ மோப்ப நாய்களுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கூலிங் கிளாஸ், ஹெட்ஃபோன், ஷூ போன்றவை அணிவிக்கப்பட்டுள்ளது.

    தலையில் ஹெட்ஃபோன், கூலிங் கிளாஸ், காலில் கனக்கச்சிதமாக பொருந்தும் ஷூ என பயிற்சியில் ஈடுபட்டுள்ள மோப்ப நாய்களைப் பார்க்கும் போது.. பலரது புருவங்களும் ஆச்சரியத்தில் உயர்வதை தவிர்க்க முடியவில்லை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai