Enable Javscript for better performance
தென் கொரிய நாடாளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சி பெரும்பான்மை இழப்பு- Dinamani

சுடச்சுட

    

    தென் கொரிய நாடாளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சி பெரும்பான்மை இழப்பு

    By  சியோல்,  |   Published on : 15th April 2016 01:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    25

    தென் கொரியாவில் புதன்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளுங்கட்சி அறுதிப் பெரும்பான்மையை இழந்தது.
     வட கொரியா ஹைட்ரஜன் அணுகுண்டு பரிசோதனையில் ஈடுபட்டதால் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை, பொருளாதார மந்த நிலை ஆகிய சூழலில் நடைபெற்ற இந்தத் தேர்தலில், எதிர்க்கட்சிகள் எதிர்பாராத வகையில் அதிக இடங்களைக் கைப்பற்றின. ஏறத்தாழ எல்லா வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில், 300 உறுப்பினர்களைக் கொண்ட தென் கொரிய நாடாளுமன்றத்தில் ஆளும் சயனுரி கட்சிக்கு 122 இடங்கள் கிடைத்தன.
     எதிர்க்கட்சியான மின்ஜு கட்சி 123 இடங்களைக் கைப்பற்றியது. எதிர்க்கட்சியிலிருந்து பிரிந்து உருவான மக்கள் கட்சி 38 இடங்களையும், சிறிய கட்சியான நீதிக் கட்சி 6 இடங்களையும் கைப்பற்றின. இதையடுத்து, கடந்த 16 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் இருந்து வந்த பெரும்பான்மை பலத்தை ஆளும் கட்சி இழந்தது. இதன்மூலம், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் எதிர்க் கட்சியான மின்ஜு கட்சி வெற்றி பெறும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai