Enable Javscript for better performance
பப்புவா நியூ கினியாவில் விமான விபத்து: 12 பேர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    பப்புவா நியூ கினியாவில் விமான விபத்து: 12 பேர் சாவு

    By  சிட்னி,  |   Published on : 15th April 2016 01:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பப்புவா நியூ கினியாவில் சிறிய வகை விமானம் விழுந்து நொறுங்கியதில், அதிலிருந்த 12 பேர் உயிரிழந்தனர்.
     இதுகுறித்து போஸீலார் கூறியதாவது:
     ஒக்ஸாப்மின் பகுதியிலிருந்து புதன்கிழமை புறப்பட்ட விமானம், கியுங்கா விமான தளம் அருகே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில், விமானி உள்பட 12 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 3 குழந்தைகளும் அடங்குவர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
     நடுவானில் விமானத்தின் என்ஜின் செயலிழந்ததால், அந்த விமானம் விழுந்து நொறுங்கியதாகக் கூறப்படுகிறது. விபத்தில் உயிரிழந்த விமானி, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் என்று ஊடகங்கள் தெரிவித்தன. இந்த விமான விபத்தில் ஆஸ்திரேலியர் உயிரிழந்ததை, அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதி செய்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai