Enable Javscript for better performance
\\\"பயங்கரவாதத்துக்கு எதிரான போர்\\\': பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ரூ.86,600 கோடி நிதி உதவி- Dinamani

சுடச்சுட

    

    "பயங்கரவாதத்துக்கு எதிரான போர்': பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ரூ.86,600 கோடி நிதி உதவி

    By  இஸ்லாமாபாத்,  |   Published on : 15th April 2016 01:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பயங்கரவாதத்துக்கு எதிரான போருக்காக அமெரிக்காவிடமிருந்து 1,300 கோடி டாலர் (சுமார் ரூ.86,600 கோடி) நிதி பெற்றுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
     இதுகுறித்து அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆலம் கட்டக் புதன்கிழமை கூறியதாவது:
     நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் உதவுவதற்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நிதியுதவி அளித்து வருகிறது.
     "கூட்டணி ஆதரவு நிதி' என்ற பெயரில் இதுவரை 1,300 கோடி டாலர் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
     இதுதவிர, ஏற்கெனவே செய்த ராணுவச் செலவுகளுக்காக, அமெரிக்காவிடமிருந்து இன்னும் 20 கோடி டாலர் (சுமார் ரூ.13,300 கோடி) பெற வேண்டியுள்ளது.
     அமெரிக்காவிடமிருந்து பெற்ற நிதியில் 40 சதவீதம் அரசுப் பணிகளுக்கும், 60 சதவீதம் ராணுவத்துக்கும் பகிர்ந்து செலவிடப்பட்டது என்றார் அவர்.
     ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முழுமையாக விலக்கிக் கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.
     பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்து வரும் "கூட்டணி ஆதரவு நிதி'யும் அத்துடன் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai