Enable Javscript for better performance
பாகிஸ்தானில் விஷம விளம்பரம்: \\\'60 லட்சத்துக்கு உதவாக்கரை நவாஸ் ஷெரிப் விற்பனை...\\\'- Dinamani

சுடச்சுட

    

    பாகிஸ்தானில் விஷம விளம்பரம்: '60 லட்சத்துக்கு உதவாக்கரை நவாஸ் ஷெரிப் விற்பனை...'

    By dn  |   Published on : 15th April 2016 01:01 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Nawaz Sharif

    லண்டன் : பழைய, உபயோகமற்ற பொருட்களை இணையத்தில் விற்பனை செய்யும் புகழ்பெற்ற நிறுவன தளத்தில், உதவாக்கரை நவாஸ் ஷெரிப் ரூ.60 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    அந்த விற்பனைக்கான விளம்பரத்தில், நவாஸ் ஷெரிப் விற்பனைக்கு என தலைப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த பொருளைப் பற்றிய விவரத்தில், புதியது ஆனால் குறைபாடுகளுடையது. இது பணி செய்ய முடியாத நிலையில் உள்ளது. எப்போதுமே இயங்காது. அது பிறவியிலேயே ஊழல் நிறைந்தது. இதன் குடும்பமும் குறைபாடுகளுடன், ஊழல் நிறைந்ததாக உள்ளது. இவரை வாங்கினால், இவரது தம்பி ஷாபாஷ் ஷெரீப்பும் இலவசம் என்று கூறப்பட்டுள்ளது.

    இது குறித்த செய்தி பாகிஸ்தானில் வேகமாகப் பரவியதும், உடனடியாக அந்த அறிவிப்பை இணையதளத்தில் இருந்து நீக்கியது சம்பந்தப்பட்ட நிறுவனம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai