Enable Javscript for better performance
\\\"பிறவிக் குறைபாட்டுக்கு ஸிகா வைரஸே காரணம்\\\'- Dinamani

சுடச்சுட

    

    சிறிய தலையுடன் குழந்தை பிறப்பது உள்ளிட்ட பிறவிக் குறைபாடுகளுக்கு ஸிகா வைரஸ் பாதிப்பே காரணம் என்பதை அமெரிக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
     இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
     ஸிகா வைரஸ் குறித்து இதுவரை திரட்டிய ஆதாரங்களின் அடிப்படையில், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய (சிடிசி) விஞ்ஞானிகள் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
     பிரேசில் நாட்டில் கடந்த ஆண்டில் ஏராளமானோர் கொசுக்கடி மூலம் பரவும் ஸிகா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானார்கள். கர்ப்பிணிகள் ஸிகா வைரஸால் பாதிக்கப்பட்டதையடுத்து, ஆயிரக்கணக்கான குழந்தைகள் பிறவிக் குறைபாட்டுடன் பிறந்தன.
     இந்த நிகழ்வுகளை விஞ்ஞானிகள் குழு முக்கியமாக கவனத்தில் கொண்டு ஆய்வுகளுக்கு உட்படுத்தியது. ஆய்வின் முடிவில், சிறிய தலையுடன் குழந்தை பிறப்பது மற்றும் பிறவகை தீவிரமான மூளைக் குறைபாடுகளுக்கு ஸிகா வைரஸ்தான் காரணம் என்பதை விஞ்ஞானிகள் குழு உறுதி செய்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     விஞ்ஞானிகளின் இந்த ஆய்வு முடிவு ஸிகா வைரஸ் நோய் பாதிப்பு குறித்த ஆய்வுகளில் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது. சிறிய தலையுடன் குழந்தை பிறப்பதற்கு பல்வேறு காரணங்கள் ஊகங்களாக கூறப்பட்டு வந்த நிலையில் கொசுக்கள் மூலம் பரவக்கூடிய ஸிகா வைரஸ்தான் காரணம் என்பது தற்போது தெளிவாகி உள்ளது என்று சிடிசி-யின் தலைவர் டாம் பிரைடன் தெரிவித்துள்ளார்.
     இதுகுறித்த முழுமையான ஆய்வு முடிவுகள் "நியூ இங்கிலாந்து ஜேர்னல் ஆஃப் மெடிசின்' ஆய்வு இதழில் வெளியாகியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai