Enable Javscript for better performance
மறுமணமா? சிரித்து மழுப்பிய ரஷிய அதிபர் புதின்!- Dinamani

சுடச்சுட

    
    23

    மக்களுடனான நேரடி தொலைபேசி உரையாடலின்போது, தனது மறுமணம் குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் (63) சிரித்து மழுப்பினார்.
     அதிபர் புதினும், அவருடன் 30 ஆண்டுகளாக இல்லறம் நடத்திய லூட்மிலாவும் விவாகரத்து செய்வதாக கடந்த 2013-ஆம் ஆண்டு அறிவித்து அதிர்ச்சி அலையை ஏற்படுத்தினர். இந்த நிலையில், லூட்மிலா இந்த ஆண்டு தொடக்கத்தில் 37 வயதான தொழிலதிபரை மணந்தார். இந்தச் சூழலில், பொதுமக்களுடன் அதிபர் புதின் நேரடியாகத் தொலைபேசியில் உரையாடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, அவருடன் பேசிய பெண், ""உங்களது அடுத்த மனைவியை எப்போது அறிமுகப்படுத்தப் போகிறீர்கள்?'' என்று கேட்டார்.
     அந்தக் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல் சிரித்த புதின், ""நான் மறுமணம் செய்து கொண்டால், ஏற்கெனவே மோசமாக உள்ள நாட்டின் பொருளாதாம் மேலும் பாதிக்கப்படுமோ என்று அச்சமாக இருக்கிறது'' என்று நகைச்சுவையாக பதில் சொல்லி மழுப்பினார். மேலும், ""உங்கள் ஆசை என்றைக்காவது பூர்த்தியாகலாம்'' என்றும் அவர் கூறினார். தலைவர்களின் கொள்கை மற்றும் அரசியல் நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே அவர்கள் மதிப்பிடப்பட வேண்டும் எனவும், அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையோடு அரசியலைத் தொடர்புபடுத்தக் கூடாது எனவும் அவர் கூறினார். விவகாரத்துக்கு முன்பே, புகழ்பெற்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா கபேயேவாவுடன் (32) புதினுக்கு நட்பு இருந்ததாகவும், அவரையே புதின் மறுமணம் செய்து கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai