Enable Javscript for better performance
முதன்முறையாக ஐ.நா. சபையில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா- Dinamani

சுடச்சுட

    

    முதன்முறையாக ஐக்கிய நாடுகள் சபையில் சட்டமேதை பி.ஆர். அம்பேத்கரின் 125-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

    இந்தியாவின் அரசியல் சட்டத்தை உருவாக்கியவரும், சமூக சீர்திருத்தவாதியும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடியவருமான அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, உலக நாடுகள் அமைப்பில் முன்முறையாக கொண்டாடப்படுவதாக ஐ.நா. வளர்ச்சி திட்ட நிர்வாகி ஹெலன் கிளர்க் தெரிவித்தார்.

    விழாவில் ஹெலன் கிளர்க் பேசுகையில், உலக அளவில் ஏழைகள் மற்றும் நலிவுற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற அம்பேத்கரின் கனவு நனவாக்கப்பட வேண்டும். நாங்கள் தொடர்ந்து இந்தியாவுடன் நெருக்கமாக ஒத்துழைப்பு அளித்து வருகிறோம் என்று கூறினார்.

    இந்த விழாவில் பல்வேறு நாடுகளின் தூதர்கள், அறிஞர்கள் மற்றும் அம்பேத்கரின் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சியின்போது, அம்பேத்கரின் உருவப் படத்துக்கு மரியாதை செய்யப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai