Enable Javscript for better performance
விசா கட்டணத்தை அமெரிக்கா உயர்த்தியது இந்திய ஐடி துறையை பாதிக்கும்: ஜேட்லி கவலை- Dinamani

சுடச்சுட

    

    விசா கட்டணத்தை அமெரிக்கா உயர்த்தியது இந்திய ஐடி துறையை பாதிக்கும்: ஜேட்லி கவலை

    By  வாஷிங்டன்,  |   Published on : 15th April 2016 01:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    14

    விசா கட்டணத்தை அமெரிக்கா உயர்த்தியுள்ள இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையை (ஐ.டி) கடுமையாக பாதிக்கும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கவலை தெரிவித்துள்ளார்.
     அமெரிக்காவுக்கு ஒரு வார கால பயணம் மேற்கொண்டுள்ள அவர், வாஷிங்டனில் புதன்கிழமை அமெரிக்க சர்வதேச சிந்தனையாளர் மாநாடு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போது ஜேட்லி கூறியதாவது:
     எச்-1பி, எல்1 விசா கட்டணங்களை அமெரிக்கா அண்மையில் உயர்த்தியுள்ளது. இது இந்திய ஐ.டி. நிறுவனங்களை கடுமையாக பாதிக்கும் நடவடிக்கையாகும். கடந்த பல ஆண்டுகளாக இந்திய ஐ.டி. துறையினரும், தொழில் துறையினரும் அமெரிக்காவில் சிறப்பான பங்களிப்பை ஆற்றி வருகின்றனர்.
     சர்வதேச அளவில் இப்போதுள்ள பொருளாதார நிலையில், இந்தியாவின் 7.5 சதவீத வளர்ச்சி என்பது போதுமானதுதானா? என்ற கேள்வி எழுந்தால், போதுமானதுதான் என்பதுதான் பதிலாக இருக்கும்.
     அதேநேரத்தில் இந்தியாவில் இப்போதுள்ள சூழ்நிலைகளையும், தேவைகளையும் பார்க்கும்போது இந்த வளர்ச்சி போதுமானது இல்லைதான். ஏனெனில் இந்தியா பொருளாதார நடவடிக்கைகளில் இதைவிடவும் சிறப்பாகச் செயல்பட முடியும்.
     இந்தியாவில் இப்போது ஏற்றுமதி குறைந்து வருவது கவலையளிக்கும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. சர்வதேசப் பொருளாதார நிலை இப்போது சற்று மந்தகதியில் உள்ளதுதான் இதற்கு முக்கியக் காரணம். எனினும், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்படும் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள் வளர்ச்சியை நோக்கி நாட்டை முன்னெடுத்துச் செல்லும் என்றார் அருண் ஜேட்லி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai