சுடச்சுட

  

  ஆப்கானிஸ்தானின் பக்டியா மாகாணத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் நிகழ்ந்த இருவேறு சாலை குண்டுவெடிப்புகளில் 10 பேர் பலியாகினர்.

  இதுகுறித்து அந்த மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர் நகீப் அகமது கூறியதாவது:

  பக்டியா மாகாணம் சம்கனி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டன.

  குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேரை ஏற்றிச் சென்ற வாகனம் சாலையோரம் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டில் மோதியதில், அந்த வாகனத்தில் செய்த அனைவரும் உயிரிழந்தனர்.

  சம்கனி மாவட்டத்தில் மற்றொரு பகுதியில் நிகழ்த்தப்பட்ட சாலையோர குண்டு வெடிப்பில் சிக்கி டிராக்டரில் சென்ற ஐந்து பேர் உயிரிழந்தனர்.

  சாலையோர குண்டுவெடிப்புகளை நிகழ்த்தும் தலிபான்கள் இந்த குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என்று நகீப் அகமது தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai